Abstract
இன்றைய திறன்பேசி உலகில், மாணவர்களின் வாசிப்புத் திறன் குறைபாடு கல்வியியலின் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. குறுந்தகவல், காணொளி, சமூக ஊடகங்கள் போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாடு, மாணவர்களின் கவனக்குவிப்பையும் உற்று நோக்கும் திறனையும் பாதித்து, நீண்டகால வாசிப்பு பழக்கத்தைச் சீர்குலைத்துள்ளது. இக்கட்டுரை உற்று நோக்குதல் முறையின் (Observation Method) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர் மூன்றம் ஆண்டு தமிழ்மொழி மாணவர்களின் வாசிப்பு நடைமுறைகளை நேரடியாகக் கவனித்து, அவர்களின் வாசிப்புத் திறனில் காணப்படும் சிக்கல்களைப் பதிவு செய்தார். ஆய்வின் போது மாணவர்கள் எழுத்து ஒலி தொடர்பு இல்லாமல் வாசித்தல், நிறுத்தற்குறிகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசித்தல், உணர்ச்சி வெளிப்பாடின்றி உரையாடல் வாசித்தல், உச்சரிப்புத் தெளிவின்மை போன்ற சிக்கல்கள் கண்டறியப்பட்டன. மேலும், திறன்பேசியின் அதிகப்படியான பயன்பாடு, பெற்றோர் கண்காணிப்பு இல்லாமை, வீட்டில் வாசிப்பு சூழல் குறைவு ஆகியவை மாணவர்களின் வாசிப்பைப் பாதித்தன. இக்கட்டுரை, மாணவர்களின் வாசிப்பில் ஏற்படும் இச்சிக்கல்களை...